Tuesday, November 21, 2017


மாத்திரை ஒன்று; பெயர்கள் இரண்டு : மருந்தாளுனர்கள் அதிர்ச்சி

Added : நவ 21, 2017 00:40



மதுரை: அரசு மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ள ஒரு மாத்திரையில் வயிற்றுவலி, ஆஸ்துமா நோய்களுக்கு உரிய மருந்துகளின் பெயர் இடம்பெற்றுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் வயிற்றுவலிக்கு வருவோருக்கு 'டை சைக்ளோமைன்' மாத்திரை வழங்கவேண்டும். ஆஸ்துமா நோய்க்கு 'டெக்சாமெத்தோஜோன்' என்ற மாத்திரை வழங்க வேண்டும். ஆனால், நேற்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட 'டை சைக்ளோமைன்' மாத்திரையின் அட்டை பகுதியில், ஆஸ்துமாவிற்கு வழங்கும் மாத்திரையின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், இவ்விரு நோயாளிகளில் யாருக்கு இந்த மாத்திரைகளை வழங்க வேண்டும் என்பது தெரியாமல், மருந்தாளுனர்கள் குழப்பத்தில் உள்ளனர். சில மருந்தாளுனர்கள் சரியாக தெரிந்துகொள்ளாமல் இரு நோய்க்கும் ஒரே மாத்திரையை வழங்கினால், நோயாளிகளுக்கு பக்க விளைவுகள் ஏற்படும்.
தமிழக மருந்தாளுனர்கள் சங்க மாநில செயலாளர் ஜெயவீரன் கூறியதாவது:
ஒரு கோடி மாத்திரைகளை மருத்துவமனைகளுக்கு வினியோகம் செய்திருப்பர். இவற்றை மாற்றி சாப்பிடுவதால் பக்கவிளைவுகள் ஏற்படும். மாற்று மருந்து சாப்பிடுவதின் மூலம் சராசரியாக 3 சதவீதத்தினர் இறப்பதாக ஆய்வே சொல்கிறது. இச்சூழலில் சரியாக கவனிக்காமல், இயக்குனர் அலுவலகம் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.
மதுரை மருத்துவமனை டீன் மருதுபாண்டியன் கூறுகையில், ''இது போன்று மாத்திரைகள் வந்திருக்க கூடாது. ஆய்வு செய்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...