Sunday, December 3, 2017

சாதா போனுக்கு கோழி, 4ஜி போனுக்கு ஆடு இலவசம்...அடேங்கப்பா 'வாழ்ப்பாடி' பொங்கல் ஆஃபர்




வாழப்பாடி: வாழப்பாடியைச் சேர்ந்த மொபைல் கடை ஒன்று சாதா போனுக்கு கோழி, 4ஜி போன் வாங்கினால் ஆடு இலவசம் என்று அசத்தும் ஆஃபரை வெளியிட்டுள்ளது .

சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலையத்தில் கந்தா மொபைல்ஸ் என்கிற மொபைல் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் உரிமையாளர் விவசாயிகள் தினம் மற்றும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு புதிய ஆஃபர் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார்.

டிசம்பர் 23ம் தேதி விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால், அந்த கடை உரிமையாளர் அறிமுகப்படுத்தி உள்ள வித்தியாசமான ஆஃபர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அப்படி என்ன வித்தியாசமான ஆஃபர் என்று கேட்கிறீர்களா ?

999 ரூபாய் மதிப்பிலான இண்டெக்ஸ், மைக்ரோமேக்ஸ் போன்கள் வாங்கினால் கோழி ஒன்று இலவசம். அதுபோல, 4ஜி மொபைல் போன் வாங்கினால் வெள்ளாடு ஒன்று இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்து உள்ளார். மேலும், இந்த ஆஃபர் வருகிற மாட்டுப்பொங்கல் வரை உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சேலம், வாழப்பாடி சுற்றுவட்டாரங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் இந்த போஸ்டரை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

source:
oneindia.com
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024