Sunday, February 11, 2018

இருந்தது 4; கொடுத்ததோ 400: மாணவர்களை ஏமாற்றிய அதிகாரிகள் துணை முதல்வர் விழாவில் கூத்து

Added : பிப் 11, 2018 06:50

தேனி:தேனியில் நடந்த துணைமுதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த அரசு விழாவில் நான்கே பரிசுகளை கொண்டு 400 மாணவர்களுக்கு மாற்றி மாற்றி வழங்கினர்.

தேனியில் பள்ளி மாணவர்களுக்கான 'கலையருவி' பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கலெக்டர் வெங்கடாசலம், எம்.எல்.ஏ., ஜக்கையன், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தி, அதிகாரிகள் பங்கேற்றனர்.

நடனம், இசை, கட்டுரை, பேச்சு உள்ளிட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு துணை முதல்வர் பரிசு வழங்கினார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர் பெயர் பொறிக்கப்பட்ட கேடயம், பரிசு பொருட்களை முறையாக ஏற்பாடு செய்யவில்லை. மாணவர்கள் நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். 400 மாணவர்களுக்கு பரிசு கொடுக்க வேண்டிய நிலையில், நான்கு கேடயம் மட்டுமே இருந்தன. ஒருவருக்கு கொடுத்த கேடயத்தையே மாற்றி மாற்றி சுழற்சியில் விட்டனர். துணை முதல்வர் பரிசு கொடுப்பது போல போட்டோ எடுத்தனர்.

இதுகுறித்து கேட்டபோது, 'பள்ளிகளுக்கு பரிசு அனுப்பப்படும்' என்றனர். இதனால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.முதன்மைகல்வி அலுவலரிடம் கேட்ட போது, ''கூட்டநெரிசலை தவிர்க்கவே போட்டியில் வென்ற 1,286 மாணவர்களுக்கும் பரிசுகளை கொடுக்க முடியவில்லை. தலைமை ஆசிரியர்கள் மூலம் அவை பள்ளிகளில் தனித்தனியாக வழங்கப்படும்,'' என்றார்.ர்.

No comments:

Post a Comment

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’ Tamaghna.Banerjee@timesofindia.com  09.01.2025 Kolkata : Three days after she was...