Thursday, February 8, 2018

58 மருத்துவ கல்லூரிகள் துவங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Added : பிப் 07, 2018 21:31




புதுடில்லி: நாட்டில் 58 மருத்துவ கல்லூரிகளை துவங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் ரூ.14,930 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கல்லூரிகளை துவங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்கட்டமாக 58 மருத்துவ கல்லூரிகளை துவங்கவும், 2ம் கட்டமாக 24 மருத்துவ கல்லூரிகளை துவங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் மருத்துவ கல்லூரிகளில் இளநிலை படிப்பில் 10,000 இடங்களும், முதுநிலை படிப்பில் 18,058 இடங்களும் உயர்த்த அனுமதி அளித்துள்ளது.

இவை தவிர, முக்கிய துறைமுக ஆணைய சட்டத்திருத்த மசோதா மற்றும் சிறிய அளவிலான எண்ணெய் வளங்களை ஓ.என்.ஜி.சி கண்டறிதல் உள்ளிட்ட திட்டங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024