Thursday, February 8, 2018

98 வயதில் எம்.ஏ., பட்டம் முதல்வர் நிதிஷ் பாராட்டு

Added : பிப் 08, 2018 00:03 



பாட்னா : பீஹாரில், 98 வயதில் முதுகலை பட்டப்படிப்பு முடித்த முதியவருக்கு, அவரது வீட்டுக்குச் சென்ற, முதல்வர் நிதிஷ் குமார், பட்டம் வழங்கி கவுரவித்தார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த, 2017ல், பாட்னாவில் உள்ள, நாளந்தா திறந்த நிலை பல்கலையில், ராஜ்குமார் வைஸ்யா, 98, பொருளாதாரத்தில், முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்றார்.

பாட்னா, என்.ஐ.டி.,யில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த, முதல்வர் நிதிஷ் குமார், தள்ளாத வயதில் முதுகலை பட்டம் பெற்ற, ராஜ்குமாரின் வீட்டுக்கு சென்று, சால்வை அணிவித்து, முதுகலை பட்டத்தை அவருக்கு வழங்கி கவுரவித்தார்.

வீடு தேடி வந்து பட்டம் அளித்த, முதல்வர் நிதிஷ் குமாருக்கு நன்றி தெரிவித்த ராஜ்குமார், ''வீட்டில் படிக்கும் சூழ்நிலை இருந்ததாலும், வாசிப்பதில் ஆர்வம் உள்ளதாலும், எம்.ஏ., பட்டம் பெற முடிந்தது.

''கல்வி கற்பதற்கு வயது தடையல்ல என்பதை, வருங்கால மாணவர்களுக்கு உணர்த்த, இந்த வயதில் படிக்க முடிவு செய்தேன்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024