Tuesday, February 6, 2018

ஆன் லைன்' முறையில் மருத்துவ கவுன்சிலிங்?

Added : பிப் 06, 2018 00:51

'தமிழக அரசு ஒப்புதல் அளித்தால், மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங், 'ஆன் லைன்' வாயிலாக நடத்தப்படும்' என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறினர்.தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையை, மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்துகிறது.இதில் பங்கேற்க, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கின்றனர். இதற்கான கவுன்சிலிங், அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடத்தப்படுகிறது.இதற்காக, 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் கணினி இயக்க தனியார் ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கான உணவு செலவுக்கு, கணிசமான பணம் செலவிடப்படுகிறது. மேலும், மருத்துவமனையில் கவுன்சிலிங் நடப்பதால், நோயாளிகளும் பாதிக்கப்படுகின்றனர். கவுன்சிலிங்கிற்கு வரும் பெற்றோர், மாணவர்களுக்கு, போதிய வசதிகள் செய்து கொடுப்பதும், சவாலாக உள்ளது. எனவே, 2018 - 19ம் கல்வி ஆண்டுக்கான, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ கவுன்சிலிங்கை, ஆன்லைன் வாயிலாக நடத்த, மருத்துவ கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங், ஆன் லைன் வாயிலாக நடைபெறுகிறது. அதே போல, மாநில மருத்துவ கவுன்சிலிங்கையும், இணையதளம் வாயிலாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, அண்ணா பல்கலையிடம், தொழில்நுட்ப உதவி கோரப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசிடமும் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால், ஆன் லைன் வாயிலாக, மருத்துவ கவுன்சிலிங் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...