Tuesday, February 6, 2018

'வயதுக்கு வந்தோர் திருமணத்தில் தலையிட எவருக்கும் உரிமையில்லை'

Added : பிப் 06, 2018 01:22

புதுடில்லி: 'திருமண வயதை எட்டிய ஆணும், பெண்ணும் திருமணம் செய்ய முடிவு செய்தால், அதில் தலையிட எவருக்கும் உரிமையில்லை' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.ஆணவக் கொலையை தடுக்கக் கோரி, அரசு சாரா அமைப்பு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, நேற்று கூறியதாவது: திருமண வயதை எட்டிய ஆணும், பெண்ணும் திருமணம் செய்ய முடிவு செய்தால், அதில் தலையிட எவருக்கும் அதிகாரமில்லை. கிராம பஞ்சாயத்துகள், கட்டப் பஞ்சாயத்துகள் இதில், சமுதாயத்தின் மனசாட்சி காவலர்களாக செயல்பட முடியாது. திருமண வயதை எட்டியவர்கள், திருமணம் செய்ய முடிவு செய்து விட்டால், அதில் பெற்றோர், குடும்பத்தார், சமுதாயம் உட்பட, எவரும் தலையிட முடியாது. திருமணம் செய்து கொள்ளும் அவர்களது உரிமையில், தனியாகவோ, கூட்டாகவோ யாரும் தலையிட முடியாது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.விசாரணை, 16க்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...