Tuesday, February 6, 2018

கும்பாபிஷேகத்தில் அசத்திய இஸ்லாமியர்கள் தலைவாழை இலையில் சைவ விருந்து

Updated : பிப் 05, 2018 21:23 | Added : பிப் 05, 2018 20:41



புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு, அதே ஊரைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், சைவ விருந்து பரிமாறி அசத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே, பழமையான சவுந்திரநாயகி, அம்பிகா சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இதற்கு, கும்பாபிஷேகம் செய்ய கிராமத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று, கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேக விழாவிற்கு நாள் குறிக்கப்பட்ட போதே, பரம்பூர் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி, கும்பாபிஷேகத்துக்கு வரும் பக்தர்களுக்கு, சிறப்பான முறையில் அன்னதானம் வழங்க வேண்டும் என, முடிவு செய்தனர்.அதன்படி, அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பக்தர்கள் வருவதற்கு வசதியாக, கோவிலுக்கு அருகிலேயே பந்தல் அமைக்கப்பட்டு, டேபிள், சேர் போடப்பட்டது. கும்பாபிஷேகம் காண வந்த பக்தர்கள் அனைவரையும் அன்புடன் அழைத்து, அனைவருக்கும் தலைவாழை இலையில், சைவ விருந்து பரிமாறப்பட்டது.

இது குறித்து, அன்னதான விழா ஏற்பாடு செய்த, முகமது பாரூக் கூறியதாவது:மத நல்லிணக்கம் என்பது, நம் தமிழகத்தின் தனித்துவமான அடையாளம்.அதை வலியுறுத்தும் விதமாகவே, இந்த அன்னதான நிகழ்ச்சியை நடத்துகிறோம். 5,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உள்ளனர். எங்களுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தியது, பெரும் மகிழ்வைத் தருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...