Tuesday, February 6, 2018

சுடிதார் அலங்காரம் : அர்ச்சகர்கள் பணி நீக்கம்

Added : பிப் 06, 2018 01:33




மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோவிலில், ஆகம விதிகளை மீறி, அபயாம்பிகை அம்பாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்ததாக, இரண்டு அர்ச்சகர்கள், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோவில் உள்ளது. கடந்த, 2ம் தேதி, தை வெள்ளியை முன்னிட்டு, மாலை வேளை பூஜையின்போது, அபயாம்பிகை அம்மன், சந்தனக்காப்பின் போது, சுடிதார் அணிந்தது போன்று, அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆகம விதிகளை மீறிய அலங்காரத்தைப் பார்த்து, பக்தர்கள், அதிர்ச்சி அடைந்தனர். கோவில் கருவறை யில் உள்ள சுவாமிகளை வெளி நபர்கள் புகைப்படங்கள், வீடியோ எடுக்க அனுமதி கிடையாது. எனினும், அம்மன் சுடிதார் அணிந்த அலங்காரத்தை, சில பக்தர்கள் மொபைல் போனில் படம்பிடித்து, 'வாட்ஸ் ஆப்' மற்றும் 'பேஸ்புக்கில்' வெளியிட்டனர். இது, ஆன்மிகவாதிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கோவில் நிர்வாகத்திற்கு தெரிவிக்காமல், அம்பாளுக்கு சர்ச்சைக்குரிய அலங்காரம் செய்த குருக்கள் ராஜ், கல்யாணசுந்தரம் ஆகிய இருவரையும், திருவாடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் உத்தரவின்படி, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கோவில் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...