Sunday, February 11, 2018

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை திறப்பு

Added : பிப் 11, 2018 06:13

சபரிமலை:மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை திறக்கிறது. 17-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறுகிறது.

மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து சபரிமலை நடை ஜன., 20-ம் தேதி காலை அடைக்கப்பட்டது. அதன் பின்னர் நாளை மாலை 5:00 மணிக்கு நடை திறக்கிறது. மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு பூஜைகள் கிடையாது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

13-ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் ஆரம்பமாகும். 17 வரை தினமும் காலை 5:30 முதல் மதியம் 12:00 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். இவற்றுடன் களபபூஜை, உதயாஸ்தமனபூஜை, சகஸ்ரகலசபூஜை ஆகிய பூஜைகள்
நடைபெறும். 17 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்

No comments:

Post a Comment

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’ Tamaghna.Banerjee@timesofindia.com  09.01.2025 Kolkata : Three days after she was...