Thursday, February 22, 2018

திருக்கோஷ்டியூரில் தெப்ப உற்ஸவம் துவக்கம்

Added : பிப் 22, 2018 02:04



திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவம் கொடியேற்றத்துடன்துவங்கியது.11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நேற்று காலை 6:00 மணிக்கு பெருமாள், தேவியருடன் கருங்கல் மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து கொடிப்படம், சக்கரத்தாழ்வார் திருவீதி உலா நடந்தது. காலை 9:50 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.இரவு தங்கப்பல்லக்கில் தேவியருடன் பெருமாள் திருவீதி உலா நடந்தது. விழா நாட்களில் தினசரிகாலை 7 :00 மணிக்கு ஆடும் பல்லக்கில் பெருமாள் தேவியருடன் புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெறும். ஆறாம் திருநாளான பிப்.,26 இரவில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும், பிப்.,27 மாலையில் பெருமாளுக்கு பொற்காசுகளால் அபிேஷகமும், மார்ச்1 காலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல், இரவில் வெண்ணெய்த்தாழி கிருஷ்ணர் அலங்காரத்தில் பெருமாள் காட்சி தருதல் நடக்கிறது. மார்ச் 2ல் பகல் 12:45மணி அளவில் பகல் தெப்பமும், இரவு 10:00 மணிக்கு தெப்பம் வலம் வருதலும் நடைபெறும். மார்ச்3 காலை தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும்,

இரவில் தங்கப்பல்லக்கில் ஆஸ்தானம் எழுந்தருளலும் நடைபெறும்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...