ரூ.40 லட்சத்தில் சமுதாயநலக் கூடம் திறப்பு
By DIN |
Published on : 03rd February 2018 04:31 AM
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:
பம்மல் நகர நடுத்தர, ஏழை, எளிய மக்களை நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தென்சென்னை மக்களவை உறுப்பினராக இருந்த டி.ஆர்.பாலு, கடந்த 2008 ஆம் ஆண்டு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கிய ரூ.40 லட்சம் நிதியில் இருந்து பம்மல் நல்லதம்பி சாலையில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இருப்பினும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கட்டி நிறைவு செய்யப்பட்ட சமுதாய நலக்கூடம் கடந்த 10 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது இக்கட்டடம் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் பம்மல் நகராட்சியைச் சேர்ந்த ஏழை, எளிய, நடுத்தர மக்கள் ரூ.5 ஆயிரம் வாடகையில் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment