Thursday, February 22, 2018

கடன்சுமை உண்மைதான்; விரைவில் சேவை சீராகும்!' - சொல்கிறார் ஏர்செல் அதிகாரி

கு.மோகனலட்சுமி

தமிழகத்தில் பெரும்பாலானப் பகுதிகளில் ஏர்செல் சேவை முடங்கிய நிலையில், இன்னும் ஒரு சில நாள்களில் சேவை சரிசெய்யப்படும் என்று ஏர்செல் தரப்பில் தெரிவித்துள்ளனர்.



  நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஏர்செல் டெலிக்காம் நிறுவனம், மிகப் பெரிய கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஜியோவில் அதிரடி வருகைக்குப் பிறகு, ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற சேவை நிறுவனங்கள் போட்டியைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஏர்செல், தனது நிறுவனத்தைத் திவால் என்று அறிவிக்கக் கோரி, தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் அமைப்பிடம் அணுகியதாகச் செய்திகள் வெளியானது.

இதனிடையே தொலைபேசி, இணைய சேவைகள் அனைத்தும் முடங்கிப்போனதால் சென்னை, திருவள்ளூர், திருப்பர், கோவை, கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் ஏர்செல் மையங்களுக்கு மக்கள் சென்று முறையிட்டனர். ஊழியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு ஏர்செல்லின் தென்னிந்திய தலைமை அதிகாரி அளித்த பேட்டியில், `வேறு நெட்வொர்க்குக்கு மாற குறுஞ்செய்தி அனுப்பிய வாடிக்கையாளர்களுக்கு, விரைவில் போர்ட் எண் கிடைக்கும். ஏர்செல் நிறுவனம் கடன் நெருக்கடியில் சிக்கியிருப்பதென்பது பாதி உண்மை. கடன் மறுசீரமைப்புப் பணிகளில் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில நாள்களில் ஏர்செல் சேவை சீராகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

Man held for ‘digital arrest’ scam

Man held for ‘digital arrest’ scam  Sindhu.Kannan@timesofindia.com 30.10.2024 Chennai : Two days after Prime Minister Narendra Modi cautione...