Friday, February 9, 2018

மீன்குழம்பு சண்டைக்காக தீக்குளித்த மனைவி! - காப்பாற்றப்போன கணவரும் பலியான பரிதாபம்

சி.ய.ஆனந்தகுமார் என்.ஜி.மணிகண்டன்
Tiruchirappalli:

குடிப்பழக்கம் ஒரு குடும்பத்தையே கண்ணீரில் மிதக்க வைத்துள்ளது.

போதை கணவர், மீன்குழம்பு வைக்கவில்லை என மனைவியிடம் சண்டையிட்டதால் ஏற்பட்ட தகறாரில், கணவன், மனைவி இருவரும் தீக்கிரையான சம்பவத்தால் திருச்சியே சோகத்தில் உறைந்துபோய் கிடக்கிறது.



திருச்சி கே.கே.நகர் உஸ்மான் அலி நகர் 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்குச் சொந்தமாக லாரிகள் உள்ளன. சிறப்பாகத் தொழில் செய்துவரும் இவர், திருச்சி குட்ஷெட் லாரி உரிமையாளர் சங்கத் தலைவராகவும், திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகின்றார்.

இவருக்கு சத்யா என்கிற மனைவியும், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ராகுல் என்கிற மகனும், 10-ம் வகுப்பு படிக்கும் உதயா என்கிற மகளும் உள்ளனர். அவருடன், சுரேஷின் தாய் கஸ்தூரியும் உள்ளார்.

இந்நிலையில் சுரேஷ், நேற்று முன்தினம் காலை, மீன் வாங்கிக் கொடுத்து விட்டு, மதியம் சமைத்து வைக்கும்படி கூறிவிட்டுத் தனது அலுவலகத்துக்குக் கிளம்பியுள்ளார். பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிட வீட்டில் சுரேஷ் தாய் கஸ்தூரியும், மனைவி சத்யாவும் இருந்தனர்.

இந்நிலையில் அன்று மதியம் வீடுதிரும்பிய சுரேஷ், குடிபோதையில் இருந்துள்ளார். போதையில் இருந்த அவர், தனது மனைவி சத்யா, வீட்டில் சாப்பாட்டுக்கு மீன்குழம்பு சமைத்து வைத்திருப்பார் என்கிற ஆவலுடன், வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் வீட்டில் வாஷிங் மெஷின் பழுதாகிப் போனதால், அழுக்குத் துணிகளைக் கையால் துவைத்ததால் குழம்பு வைக்கத் தாமதமாகிவிட்டது என சத்யா கூறியுள்ளார்.

இதைக் கேட்ட சுரேஷ், சத்யாவிடம் மீன்குழம்பு வைக்கவில்லை என சண்டை போட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுரேஷ், சத்யாவின் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சத்யா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றியுள்ளார். பதிலுக்கு சுரேஷும் தானும் தீக்குளிக்கப் போவதாக சத்யாவிடம் வம்பு பண்ணியுள்ளார். ஆனால், சத்யா வீட்டின் கழிவறைக்குச் சென்றதுடன், அங்கே தனது உடலுக்குத் தீ வைத்துக்கொண்டார். அவரின் உடல் முழுவதும் தீ பரவியதால் சத்யா அலறியடித்து வெளியே ஓடிவந்தார். இந்நிலையில் மனைவியின் அலறல் சத்தத்தைக் கேட்ட சுரேஷ், மனைவி சத்யாவை காப்பாற்ற நினைத்து, அப்படியே தூக்கியுள்ளார். இதில் சுரேஷ் உடலிலும் தீப்பிடித்தது.

தீ வேகமாக உடலெங்கும் பரவ, இருவரும் தங்களைக் காப்பாற்றும்படி அலறினர். இதனைப் பார்த்த சுரேஷின் தாயார் கஸ்தூரி அலறியடித்தபடி வீட்டுக்கு வெளியே ஓடிவந்து கதறியழவே, சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சுரேஷ், சத்யாவின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அதனைத்தொடர்ந்து தீக்காயமடைந்த இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

 ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முதலில் சத்யாவும், அடுத்து சுரேஷும், அடுத்தடுத்து பலியானார்கள். இதுகுறித்து திருச்சி கே.கே.நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று இருவரின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து, பலியான சுரேஷ், சத்யாவின் இறுதிச்சடங்கு முடிய இரவு ஆனதால் திருச்சி ஏர்போர்ட் பகுதியே சோகத்தில் உறைந்து கிடந்தது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...