Saturday, February 24, 2018


ஏர்செல் சேவை நாளை காலைக்குள் சீராகும்: தலைமைச் செயல் அதிகாரி தகவல்

 

By DIN  |   Published on : 23rd February 2018 08:13 PM  |

சென்னை: ஏர்செல் சேவை வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நாளை காலைக்குள் சீராகும் என்று அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 'ஏர்செல்' நிறுவனத்தின் செல்லிடப்பேசி சேவை புதன்கிழமை கடுமையாக பாதிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தொலைபேசி, இணைய சேவைகள் அனைத்தும் முற்றிலும் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் ஆத்திரமடைந்தனர்.

வேறு நிறுவனத்துக்கு மாற்றும் வசதி: ஏர்செல் நிறுவனத்தின் சேவை திருப்திகரமாக இல்லாத காரணத்தால், வேறு செல்லிடப்பேசி சேவை வழங்கும் நிறுவனத்துக்கு மாறுவதிலும் சிக்கல்கள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் 'ஏர்செல்' நிறுவனத்தின் செல்லிடப்பேசி சேவை சரியாக நான்கு நாட்கள் ஆகும் என்று வியாழனன்று அந்நிறுவன தென் இந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக தமிழகத்தில் ‘ஏர்செல்’ சேவை இன்றும் முடங்கியது. இதன் காரணமாக பொது மக்களுடைய இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏர்செல் சேவை வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நாளை காலைக்குள் சீராகும் என்று அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது

தமிழகத்தில் ஏர்செல் செல்லிடப் பேசி சேவையானது 60% சரி செய்யப்பட்டுள்ளது. வியாழன் நள்ளிரவுக்குள் செல்போன் சேவை முழுமையாக சீர் செய்யப்படும். தொழில்நுட்ப சேவை பொறியாளர்கள் ஆயிரம் பேர் சிக்னல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை காலைக்குள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஏர்செல் சேவை சீராகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...