திடீரென குறைந்த ஃபாலோயர்ஸ்: ட்விட்டரை விட்டு விலகவுள்ளதாக அமிதாப் பச்சன் அறிவிப்பு!
By எழில் |
Published on : 01st February 2018 03:36 PM
33 மில்லியன் பேர் ட்விட்டரில் அமிதாப் பச்சனைப் பின்தொடர்கிறார்கள். இந்த எண்ணிக்கை திடீரென குறைந்து 32.9 மில்லியனாக மாறியது. இதனால் கடுப்பாகியுள்ள அமிதாப் பச்சன், ட்விட்டரை விட்டு விலகிவிடுவேன் என்று கோபத்துடன் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்வீட் செய்ததாவது: ட்விட்டர், என்னுடைய ஃபாலோயர்களைக் குறைத்துள்ளீர்கள். இது வேடிக்கையானது. ட்விட்டரிலிருந்து விலகவேண்டிய நேரமிது. இந்தப் பயணத்துக்கு நன்றி. கடலில் வேறுவகையான மீன்கள் உள்ளன. அவை சுவாரசியமாகவும் உள்ளன என்று ட்வீட் செய்துள்ளார்.
ட்விட்டரில் அதிகமான ஃபாலோயர்களைச் செயற்கையான முறையில் அதிகப்படுத்தினால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. ட்விட்டரில் செயற்கையான முறையில் ஃபாலோயர்களை அதிகப்படுத்தும் வழிகளைச் சிலர் மேற்கொண்டுவருகிறார்கள். இதையடுத்து அதைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது ட்விட்டர் நிறுவனம். எனவே இதன் அடிப்படையில் அமிதாப் பச்சனின் ஃபாலோயர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதா என்று தெரியவில்லை.
இந்தியப் பிரபலங்களில் ஷாருக் கானுக்கு 32.9 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளார்கள். இதற்கு முன்பு ஷாருக் கானை விடவும் அதிக ஃபாலோயர்களைக் கொண்டிருந்த அமிதாப் பச்சன், ட்விட்டரின் நடவடிகையால் ஷாருக் கானுக்கு இணையான ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். எனினும் சல்மான் கான் (30.7 மில்லியன்), ஆமிர் கான் (22.8 மில்லியன்), பிரியங்கா சோப்ரா (21.6 மில்லியன்), தீபிகா படுகோன் (23 மில்லியன்) ஆகியோரை விடவும் அதிக அளவிலான ஃபாலோயர்கள் அமிதாப் பச்சனுக்கு உண்டு.
No comments:
Post a Comment