சென்னை: குளிர்காலம் முடிந்து இன்னும் சில தினங்கள் கூட முடியவில்லை பங்குனி மாத வெயிலைப் போல பட்டையைக் கிளப்புகிறது. இரவில் புழுக்கம் தாங்க முடியவில்லை. சென்னை, வேலூர், தொடங்கி தென் மாவட்டங்களில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. இப்போதே இப்படி எனில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் அளவு 109 முதல் 111 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பமே அனல் கோடை காலம் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்கள் உள்ளன. பொதுவாக குளிர் காலத்துக்கும், கோடைக்கும் இடைப் பட்ட நாட்களில் லேசான வெயில் அடிக்கும். இந்த வெயில் இதமாக இருக்கும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக தற்போது கோடை காலத்தைப்போல வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
மதுரையில் கொளுத்துது மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதுரையில் நேற்று 36.2 டிகிரி செல்சியஸ் (97.16 ஃபாரன்ஹீட்) வெயில் பதிவானது. இந்தியாவில் மார்ச் மாத தொடக்கத்தில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால், இன்று நாக்பூரில் பலத்த மழை பெய்துள்ளது. பருவ நிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. என்று
10 ஆண்டுகளில் 10 ஆண்டுக்கு முன்பு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மதுரையின் அதிகபட்ச வெயில் அளவு 80 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இது 89.6 டிகிரியாக உள்ளது. அக்னி நட்சத்திர காலத்தில் 107 டிகிரி வெயில் அடிக்கும். ஆனால் இப்போதைய அக்னி நட்சத்திர காலத்தில் 110 டிகிரியை எட்டும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment