Monday, March 2, 2015

பிளஸ் 2 தேர்வு அறைகளில் நாற்காலி கிடையாது! :ஆசிரியர்கள் 3 மணி நேரம் நிற்க உத்தரவு

'பிளஸ் 2 பொதுத் தேர்வில், கண்காணிப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு நடக்கும், மூன்று மணி நேரமும், உட்காராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும்; தேர்வு அறையில், நாற்காலி போடக்கூடாது' என, தேர்வுத் துறை இயக்குனரகம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

5ம் தேதி:பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும், 5ம் தேதி துவங்குகிறது. காலை, 10:00 மணிக்குத் தேர்வு துவங்கி, பிற்பகல், 1:15 மணிக்கு முடிகிறது.

* முதல், 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசித்து பார்க்கலாம்.

* அடுத்த, ஐந்து நிமிடங்கள் மாணவர் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை கண்காணிப்பாளர் சரிபார்க்கலாம்.

* காலை, 10:15 மணி முதல் 1:15 மணி வரை தேர்வு நடக்கும்.

* மாணவர்களுக்கு சாதகமாக, தேர்வு அறை கண்காணிப்பாளர் அவர்களை காப்பிஅடிக்கவோ, 'பிட்' அடிக்கவோ உதவாத வகையில், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் படி,

* இந்த ஆண்டு தேர்வு அறைக் கண்காணிப்பாளருக்கு தேர்வு அறையில், நாற்காலி போடக் கூடாது.

* தேர்வு அறையில், மாணவர்களின், 'பெஞ்சில்' கூட கண்காணிப்பாளர் அமரக் கூடாது.

* தேர்வு துவங்கும், 10:00 மணி முதல் தேர்வு முடியும், 1:15 மணி வரை கண்காணிப் பாளர் நின்று கொண்டோ, தேர்வு அறையில் நடமாடிக் கொண்டோ, விழிப்புடன் இருக்க வேண்டும்.

* மாணவரிடமோ, அரு கில் உள்ள தேர்வு அறைக் கண்காணிப்பாளரிடமோ அனாவசியமாக பேசவோ, கலந்துரையாடவோ கூடாது.

* மொபைல் போன் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனத்தை யும் தேர்வு அறைக்குள் கொண்டு வரக் கூடாது.

* மாணவர்களிடம் தேவை யின்றி பேசுவதோ, வாக்குவாதம் செய்வதோ கூடாது.

* கண்காணிப்பாளராக பணி யாற்றும் ஆசிரியர் தன் மொபைல் போனை, தலைமை ஆசிரியர் அல்லது தேர்வு மையத் தலைமைக் கண்காணிப்பாளரிடம் கொடுத்து விட்டுத்தான் தேர்வு அறைக்குள் வர வேண்டும்.

* தேர்வு மையம் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர், அந்தப் பள்ளி யில், தேர்வு நாளில் பணியாற்றக் கூடாது.

அதிரடி மாற்றம்:இவ்வாறு, தேர்வுத் துறை இயக்குனரகம் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. பள்ளித் தலைமை ஆசிரியர்கள், தேர்வுத் துறை இயக்குனரக உத்தரவுப்படி, வேறு மண்டலத்துக்கோ, மாவட்டங்களுக்கோ தேர்வுப் பணிக்கு அனுப்பப்பட உள்ளனர் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024