Friday, March 20, 2015

64 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு: முதியவரின் விடா முயற்சி


அலகாபாத்: உ.பி.யில் 64 வயது முதியவர் பத்தாம் வகுப்பு மெட்ரிக் தேர்வு எழுதிய சம்பவம் நடந்துள்ளது. 
உ.பி.மாநிலம் பதேபூர் மாவட்டம் கஹா என்ற கிராமத்தை ச்சேர்ந்தவர் அக்தர் அன்சாரி (64), முன்னர் கூலி தொழிலாளியாக இருந்தார்.
நேற்று மாநில அரசு கல்வி வாரியத்தின் 10-ம் வகுப்பு மெட்ரி தேர்வு துவங்கியது. கவுஷாம்பி கிராமத்தில் உள்ள நாரா பள்ளி தேர்வு மையத்தில், தேர்வு அறைக்கு வந்த அக்தர் அன்சாரியை பார்த்ததும் தேர்வு எழுத வந்த மற்றவர்கள் தேர்வு நடத்தும் அதிகாரி என நினைத்து வணக்கம் சார் என்றனர்.அதனை பொருட்படுத்தாத அக்தர் அன்சாரி தனது இருக்கையில் அமர்ந்தார், தேர்வு அதிகாரியிடம் வினா தாளை வாங்கி கடகடவென தேர்வு எழுத துவங்கினார். பின்னர் தான் தெரிந்தது அக்தர்அன்சாரி மெட்ரிக் தேர்வு எழுத வந்தவர் என்பது.

அக்தர் அன்சாரி கூறுகையில், எனது குடும்பத்தில் அனைவரும் படித்த பட்டதாரிகளாக உள்ளனர். நான் எட்டாம் வகுப்புவரை படித்துவிட்டு குடும்ப பாரபரத்தை சுமக்க வேண்டியிருந்ததால் மேல்படிப்பு படிக்க முடியாமல்போனது.எனினும் எப்படியாவது 10-ம் வகுப்பு தேர்வு எழுதிடவேண்டும் என்ற நம்பிக்கையில் ஆன்லைன் வாயிலாக பதிவுசெய்து விண்ணப்பித்து தேர்வு எழுதினேன். ஐம்பது ஆண்டுகளுக்கு பின் தேர்வு எழுதியது எனக்கு கடினமக இருந்தது. இதற்காக தினசரி நாளிதழ்கள் படிப்பது, நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகம் வாசிக்க சில மணி நேரம் செலவிடுவது என பல வழிகளில் முயற்சித்தேன்.. பேரன் , பேத்திகளை போன்ற மாணவர்களுடன் அமர்ந்து தேர்வு எழுதியதால் எனக்கு சிறிதும் கவலையோ ,சங்கடமோ இல்லை என்றார்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...