ஆதார் அட்டை இதுவரை வரவில்லை என்பதற்காக ஏற்கனவே புகைப்படம் எடுத்தவர்கள் மறுமுறை எடுக்க தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறுகிறது.
2010ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு சீட்டு எண் உள்ள நபர்கள், அதனை பயன்படுத்தி புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். மக்கள் தொகை கணக்கெடுப்பு சீட்டு இல்லாதவர்கள் புதிதாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துகொடுத்து புகைப்படம் எடுக்கலாம். ஏற்கனவே ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்தவர்களுக்கு, விரைவில் அஞ்சல் மூலம் ஆதார் அட்டை வந்தடையும்.
மேலும், ஆதார் இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். அதற்காக, மக்கள் கணினி மையங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருமுறைக்கு மேல் புகைப்படம் எடுத்துக்கொண்டால் அது செல்லாதவையாகிவிடும்.
ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க வருவோர், மக்கள் தொகை கணக்கு சீட்டு, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அட்டை ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.
ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குறிப்பிட்ட தேதிகளில் புகைப்படம் எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
No comments:
Post a Comment