Wednesday, July 12, 2017

வறட்சியிலும் புரட்சி காணும் திண்டுக்கல் பேரீச்சம்பழம்

பதிவு செய்த நாள் 11 ஜூலை
2017
23:58


திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வறட்சியிலும், புரட்சி காணும் வகையில் பேரீச்சம் பழம் சீசன் துவங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீருக்கே மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆழ்துளை கிணறு மூலம் வறட்சியிலும், புரட்சி காணும் விதமாக பேரீச்சம்பழம் காய்த்துள்ளது. திண்டுக்கல், முள்ளிப்பாடியில் 13 ஏக்கரில் பேரீச்சம் பழத் தோட்டம் உள்ளது. இதில் 612 மரங்கள் உள்ளன. இவை பிப்ரவரில் பூக்கும். அப்போது இயற்கையான மண் புழு மற்றும் தொழு உரம் இடப்படுகிறது. ஜூன், ஜூலை முதல் ஆகஸ்ட் வரை அறுவடை காலம். திண்டுக்கல்லில் சீசன் களைகட்டி உள்ளதால், இவற்றை பல மாவட்ட வியாபாரிகளும் வாங்கிச் செல்கின்றனர். ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரை தரத்திற்கேற்ப விற்பனையாகிறது.

உரிமையாளர் அன்பழகன் கூறியதாவது: பேரீச்சம்பழம் மரத்திலேயே பழுக்கும்போது பறித்து சாப்பிட்டால் அதிகளவு சத்தும், சுவையும் இருக்கும். இதனால் பல மாவட்டங்களில் இருந்து வாங்கி செல்கின்றனர்.
பூக்கும்போது காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டுகள் தாக்கும். 3 மாதத்திற்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை உழவு செய்ய வேண்டும். தென்னை மரத்தை விட அதிகளவில் தண்ணீர் தேவைப்படும். வறட்சியிலும் பேரீச்சம்பழத்தில் புரட்சி செய்கிறோம். தற்போது சீசன் களைகட்டி
உள்ளது என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024