Thursday, July 13, 2017

பஸ் நிலைய சிக்கல் தீருமா? : கிளாம்பாக்கத்தில் ஆய்வு

பதிவு செய்த நாள் 13 ஜூலை
2017
00:54

வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிய பஸ் நிலைய திட்டத்துக்கு தேர்வான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., உத்தரவிட்டுள்ளது.தென் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள், கோயம் பேட்டுக்கு வந்து செல்வதால், நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க, வண்டலுாரில் புதிய பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில், 88 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது. இங்கு, புதிய பஸ் நிலையத்துக்கான வடிவமைப்பு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், திட்டத்துக்கு தேர்வான நிலத்தில் பெரும்பகுதி, இந்திய தொல்லியல் ஆய்வு துறையால் தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ளது தெரிய வந்தது. இதனால், புதிய பஸ் நிலைய பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகளுடன் இணைந்து, கிளாம்பாக்கம் நிலத்தை நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, தொல்லியல் துறையால் தடை செய்யப்பட்ட பகுதிகள், தனியார் ஆக்கிரமிப்புகள் குறித்து, விசாரித்தனர். இங்கு, சில பகுதிகளில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பு களை அகற்ற, வருவாய் துறைக்கு, சி.எம்.டி.ஏ., அதிகாரி கள் உத்தரவிட்டனர். இருப்பினும், தொல்லியல் துறை தடையால் ஏற்பட்ட சிக்கலை தீர்க்கும் வழிமுறைகள் ஏதும், இறுதி செய்யப்படவில்லை என, அதிகாரிகள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024