Saturday, July 1, 2017

டாஸ்மாக்கை நொறுக்கிய பொதுமக்கள்


திருவாரூரில் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

2017-07-01@ 05:23:32

திருவாரூர்: திருவாரூர் அருகே  டாஸ்மாக் கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். திருவாரூர் அடுத்த கண்கொடுத்தவணிதம் கடைத்தெருவில் இயங்கி வந்த மதுக்கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை அங்கிருந்து அகற்றி நத்தம் கிராமத்தில் புதிதாக அமைப்பதற்காக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அப்போது அந்த இடத்தில் மளிகை கடைக்காக கட்டிடம் கட்டப்படுவதாக அலுவலர்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த 26ம் தேதி திடீரென அந்த கட்டிடத்தின் பக்கவாட்டில் தகர சீட் ஷெட் அமைக்கப்பட்டு மதுக்கடையை தொடங்கி விற்பனை நடந்தது. இதையடுத்து 27ம் தேதி சம்பவ இடத்துக்கு சென்று கடையை அகற்றுமாறு பொதுமக்கள் தெரிவித்தனர். கடந்த 4 நாட்களாக டாஸ்மாக் கடை திறக்கவில்லை. இதைதொடர்ந்து நேற்று அந்த ஷெட்டை பிரித்து எரிந்து அங்கிருந்த நாற்காலிகளை பொதுமக்கள் அடித்து உடைத்தனர். கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின், போராட்டம் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...