Thursday, July 6, 2017

தொப்பை ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு இல்லை

By DIN  |   Published on : 06th July 2017 05:02 AM  | 
POLICE1

தொப்பை வயிறுடன் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று அளிக்கப்பட்ட பரிந்துரையின் மீது மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கும் விவகாரத்தில் தற்போது எந்த விதிகளும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஐபிஎஸ் அதிகாரியாக நியமிக்கப்படும் ஒருவர், குறிப்பிட்ட காலம் சேவையாற்றிய பிறகு, பதவி உயர்வு அளிக்கப்பட்டு பல்வேறு உயர்பதவிகளில் நியமிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டுமெனில், அவர்கள் நிச்சயம் தகுந்த உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. அதாவது, தொப்பையுடன் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது.

இந்தப் பரிந்துரைகளையும் சேர்த்து, ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்க பின்பற்ற வேண்டிய வரைவு விதிகளை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை இறுதி செய்துள்ளது. அந்த வரைவு விதிகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி, அதன்மீது கருத்துகளை தெரிவிக்கும்படி மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை கேட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நிபுணத்துவம் பயிற்சித் திட்டம் அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கருதுகிறது. இதனால், ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு பெற்று, டிஐஜி, ஐஜி, ஏடிஜி ஆகிய பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு, அவர்கள் 3 கட்ட நிபுணத்துவ பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்திருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதற்காக 20 கள பணிகளை மத்திய உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகள் எந்நேரமும் போதிய தகுதியுடன் (உடல்தகுதி உள்ளிட்ட தகுதி) இருப்பதை உறுதி செய்யும் வகையிலேயே இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024