Wednesday, 12 July 2017
மருத்துவம், என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிப்போகிறது எப்போது நடைபெறும் என்று அறிவிக்க முடியாத நிலை
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான
மாணவர் சேர்க்கையில் மாநில திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும்,
சி.பி.எஸ்.சி. உள்ளிட்ட பிறவகை பாடதிட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15
சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதை எதிர்த்து பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பு வரும் வரை மருத்துவ மாணவர் சேர்க்கை நடவடிக்கைக்கு தடை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வருகிற 14-ந்தேதி மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியிடப்படவும், கலந்தாய்வு 17-ந்தேதியும் தொடங்க இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மருத்துவ தரவரிசைப்பட்டியல், கலந்தாய்வு ஆகியவை தள்ளிப்போகிறது’ என்றார். மருத்துவ கலந்தாய்வு தள்ளிப்போவதால் என்ஜினீயரிங் கலந்தாய்வும் தள்ளிப்போகிறது. இரு கலந்தாய்வும் எப்போது நடைபெறும் என்று அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment