Wednesday, October 4, 2017

முடிவுக்கு வந்தது விடுமுறை: மின் தேவை எகிறியது
பதிவு செய்த நாள்03அக்
2017
21:50

தொடர் விடுமுறைக்கு பின், பள்ளிகள், அலுவலகங்கள், நேற்று திறக்கப்பட்டதால், ஒரே நாளில், மின் தேவை, 1,500 மெகாவாட்டை தாண்டியது. தமிழகத்தில், தினசரி மின் தேவை சராசரியாக, 13 ஆயிரம் மெகாவாட் என்றளவில் உள்ளது. ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தியை யொட்டி, செப்., 29ல் இருந்து, நேற்று முன்தினம் வரை, தொடர்ந்து அரசு விடுமுறை. 

இதனால், பள்ளிகள், கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாததால், மின் தேவை, 11 ஆயிரம் மெகாவாட்டிற்கு கீழ் சென்றது. குறிப்பாக, நேற்று முன்தினம், மின் தேவை, 10 ஆயிரத்து, 360 மெகாவாட் என்றளவில் இருந்தது. இந்நிலையில், விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் அலுவலகங்கள் மீண்டும் செயல்பட துவங்கின. இதனால், ஒரே நாளில் மின் தேவை, 1,550 மெகாவாட் அதிகரித்து, 11 ஆயிரத்து, 910 மெகாவாட்டாக இருந்தது. இது, தொடர்ந்து அதிகரிக்க உள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் தேவை குறைந்ததால், அனல் மின் நிலையங்களில், 900 மெகாவாட் மட்டும், உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, மீண்டும் அதிகரித்து வருவதால், அவற்றில், 1,450 மெகாவாட்டிற்கு மேல் உற்பத்தி செய்யப்படுகிறது; இது, படிப்படியாக அதிகரிக்கப்படும். நீர் மின் நிலையங்களிலும், நீண்ட நாட்களுக்கு பின், 1,400 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024