Wednesday, October 4, 2017

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம்:4 பஸ்கள் பறிமுதலாகிறது; 25 பேருக்கு அபராதம்

பதிவு செய்த நாள்03அக்
2017
22:42

நாகர்கோவில்:குமரி மாவட்டத்தில் நான்கு நாள் விடுமுறையில் அதிக அளவுக்கு கட்டணத்தை உயர்த்திய 25 ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 4 பஸ்கள் பறிமுதலாகிறது.கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்ல இரண்டு ரயில்களை தவிர்த்தால், ஆம்னி பஸ்களை நம்பித்தான் மக்கள் உள்ளனர். அரசு பஸ்களில் கூடுதல் பயண நேரம் ஆகிறது. ஆனாலும் தொடர் விடுமுறை காலங்களில் இந்த பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதை பயன்படுத்தி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விடுகின்றனர்.

நேற்று முன்தினம் இதுபோல அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்ததை தொடர்ந்து, வட்டார போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வடசேரி ஆம்னி பஸ் ஸ்டாண்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பல பஸ்களிலும் அதிக கட்டணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், 25 பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 4 பஸ்கள் மிக அதிக கட்டணம் வசூலித்திருந்ததால் அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பஸ்கள் நேற்று காலை சென்னை சென்றடைந்தன. அங்கிருந்து புறப்பட்டு இன்று காலை நாகர்கோவில் வந்ததும், அந்த பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024