Friday, October 6, 2017


தீபாவளி கங்கா ஸ்நானம் : காசிக்கு சிறப்பு ரயில்


சென்னை: தீபாவளியையொட்டி, கங்கையில் நீராட, தனி சுற்றுலா ரயிலை, ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது. இந்த ரயில், மதுரையில் இருந்து, 14ம் தேதி புறப்பட்டு, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக செல்லும். ஒடிசாவில், பூரி ஜெகன்நாதர், கோனார்க், சூரிய நாராயணார் கோவிலில், தரிசனம் செய்யலாம்.
உ.பி., மாநிலம், காசியில் உள்ள, கங்கை நதியில், தீபாவளியன்று நீராடலாம். அயோத்தியில், ராமஜென்ம பூமிக்கு சென்று வரலாம்; அலகாபாத் திரிவேணி சங்க மத்திலும் நீராடலாம். 12 நாட்கள் சுற்றுலாவுக்கு, 11 ஆயிரத்து, 340 ரூபாய் கட்டணம்.

கர்நாடகா சுற்றுலா : கர்நாடகாவில், பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்லும் வகையில், பக்தி சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், நாளை, மதுரையில் இருந்து புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, போத்தனுார் வழியாக இயக்கப்படும். கர்நாடகாவில், தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில், ஹோரநாடு அன்னபூரணி, சிருங்கேரி சாரதா பீடம், கொல்லுார் மூகாம்பிகை, முருடேஷ்வரில் உள்ள முருடேஷ்வர் மற்றும் உடுப்பி கிருஷ்ணனையும் தரிசிக்கலாம். ஐந்து நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 6,045 ரூபாய் கட்டணம். மேலும் தகவல்களுக்கு, 90031 40681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024