Friday, October 6, 2017

மூத்த குடிமக்களுக்கு உதவுங்க: ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு

பதிவு செய்த நாள்

05அக்
2017 
23:53
புதுடில்லி : மூத்த குடி­மக்­கள், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் ஆகி­யோ­ருக்கு, வங்கி சேவை­களை செய்து தரும்­படி, அனைத்து வங்­கி­க­ளுக்­கும், ரிசர்வ் வங்கி உத்­த­ர­விட்டு உள்­ளது.

சமீ­ப­கா­ல­மாக, மூத்த குடி­மக்­கள், மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் ஆகி­யோ­ருக்கு, வங்கி சேவை முறை­யாக அளிக்­கப்­ப­ட­வில்லை என்­பது தொடர்­பாக, ரிசர்வ் வங்­கிக்கு ஏரா­ள­மான புகார்­கள் வந்­தன. இதை­ய­டுத்து, அனைத்து வங்­கி­க­ளுக்­கும், ரிசர்வ் வங்கி சுற்­ற­றிக்கை அனுப்பி உள்­ளது. 
அதில், ‘மூத்த குடி­மக்­கள், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் ஆகி­யோ­ருக்கு, வங்கி சேவை­களை, கட்­டா­யம் அளிக்க வேண்­டும்; அவர்­களை, புறக்­க­ணிக்­கக் கூடாது. மேலும், ‘டிஜிட்­டல்’ பரி­வர்த்­த­னை­களை, அவர்­கள் மேற்­கொள்ள, வங்­கி­கள் உதவ வேண்­டும். ‘வங்கி சேவை தொடர்­பான, அனைத்து பரி­வர்த்­த­னை­க­ளுக்­கும், தகுந்த உத­வி­ களை, வங்­கி­கள் செய்து தர வேண்­டும். இது குறித்த விரி­வான அறிக்கை, இம்­மாத இறு­திக்­குள் வெளி­யி­டப்­படும். ‘கூட்­டு­றவு வங்­கி­க­ளி­லும், நடப்பு கணக்கு துவக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு உள்­ளது’ என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
 

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024