Thursday, October 26, 2017

100 விவசாயிகளின் பெயர்கள்  ஒரே, 'ஆதார்' எண்ணுடன் இணைப்பு
மும்பை:மஹாராஷ்டிராவில், கடன் தள்ளுபடி பெற விண்ணப்பித்துள்ள விவசாயிகளில், 100 பேர், ஒரே ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு உள்ளது, அதிகாரிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், விவசாயக் கடன், 34 ஆயிரம் கோடி ரூபாய்
ரத்து செய்யப்பட உள்ளதாக, முதல்வர் பட்னவிஸ் அறிவித்தார். இதற்காக, விவசாயிகள், இணைய தளத்தில், விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.

இதன்படி, சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களை பரிசீலித்த அதிகாரிகள், விவசாயி களின் ஆதார் எண், பெயர்கள், அவர்கள் பெற்ற கடன் தொகை, அவர்களின் நில அளவு உள்ளிட்ட, பல்வேறு தகவல்கள் முரண்பாடாக இருந்ததை பார்த்து, திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.

கடன் தள்ளுபடி கோரி விண்ணப்பித்த விவசாயி களில், 100க்கும் மேற்பட்டோருக்கு, ஒரே ஆதார் எண் தரப்பட்டுள்ளது, அதிகாரிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைப்பது ஏற்கனவே, தாமதமாகி வரும் நிலையில்,தற்போது எழுந்துள்ள பிரச்னை களுக்கு தீர்வு காண முடியாமல், அதிகாரிகள் தவிக்கின்றனர்.



இதையடுத்து, வங்கி அதிகாரிகளின் அவசர கூட்டத்தை, முதல்வர் பட்னவிஸ், நேற்று கூட்டினார். தற்போதுள்ள சூழ்நிலையில், விவசாயிகளுக்கு தாமதமின்றி, நிவாரணம் கிடைப்பதற்கான வழிமுறைகளை ஆராயும்படி, அதிகாரிகளுக்கு, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024