Thursday, October 26, 2017

தேர்வு முடிவுகள் தாமதம் : துணைவேந்தர் நீக்கம்

மும்பை: பல்கலைக்கழக தேர்வு முடிவை வெளியிடாமல் தாமதப்படுத்தும், மும்பை பல்கலைக்கழக துணைவேந்தரை, பதவியில் இருந்து நீக்கி, மஹாராஷ்டிர மாநில கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான, வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
கடந்த, 2015 முதல், மும்பை பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகிக்கும், சஞ்சய் தேஷ்முக், 52, பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதப்படுத்தியதால், பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, மஹாராஷ்டிர மாநில கவர்னர் மாளிகை அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச் மாதம் நடந்த பல்கலைக்கழக தேர்வு முடிவுகள், நான்கு மாதங்களாகியும் அறிவிக்கப்படவில்லை. இதனால், இறுதியாண்டு முடித்த மாணவர்கள், வேலை வாய்ப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்வு முடிவை வெளியிடுவதை தாமதப்படுத்திய துணைவேந்தர், பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024