Sunday, October 22, 2017

ஒரு மாதத்திற்குள் 1,044 டாக்டர்கள் நியமிக்கப்படுவர்: விஜயபாஸ்கர்

திருவண்ணாமலை:''தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், ஒரு மாதத்திற்குள், 1,044 டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், டெங்கு ஒழிப்பு பணி குறித்து, நேற்று முன்தினம், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், காலி பணியிடங்கள், தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. எம்.பி.பி.எஸ்., படித்த, 300 டாக்டர்கள், 744 எம்.டி., - எம்.எஸ்., போன்ற முதுநிலை சிறப்பு டாக்டர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. ஒரு மாதத்திற்குள், 1,044 டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாமல், தமிழகத்தில் மட்டும், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்படுகின்றனர். 
அதன்படி, தமிழகத்தில் இந்த தேர்வு வாரியம் மூலம், இதுவரை, 23 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

சித்த மருத்துவர்களுக்கான தேர்வும் நடத்தப்பட்டுள்ளது. தேர்வு பெற்ற சித்த மருத்துவர்கள், 
விரைவில் பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY