Thursday, October 26, 2017


15 ஆயிரம், 'சிம்' கார்டுகள் பி.எஸ்.என்.எல்., இலவசம்

மொபைல் போன் வாங்குவோருக்கு, இலவசமாக, 'சிம் கார்டு' தரும் திட்டத்திற்காக, 15 ஆயிரம், 'சிம்'களை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் வழங்கியுள்ளது. மொபைல் போன் தயாரிக்கும், 'மைக்ரோ மேக்ஸ்' நிறுவனமும், பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி, அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள, குறைந்த விலை மொபைல் போன் வாங்குவோருக்கு, இலவசமாக, பி.எஸ்.என்.எல்., சிம் கார்டு வழங்கப்படுகிறது.
அந்த மொபைல் போனின் விலை, 2,200 ரூபாய். அதில், '4ஜி' அழைப்புகளை பேசும் வசதி உள்ளது. அதை வாங்குவோருக்கு, ஒரு, பி.எஸ்.என்.எல்., சிம் கார்டு தரப்படுகிறது. அதில், மாதக் கட்டணமாக, 97 ரூபாய் செலுத்தினால், ஒரு மாதம், இலவச இன்டர்நெட் மற்றும் அளவில்லா அழைப்பு இலவசமாக தரப்படுகிறது. அந்த திட்டத்திற்காக, சென்னை, காஞ்சி, திருவள்ளூர் தவிர்த்த, பி.எஸ்.என்.எல்., தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம், 'மைக்ரோமேக்ஸ்' நிறுவனத்திற்கு, 15 ஆயிரம் சிம் கார்டுகளை வழங்கியுள்ளது.

- - நமது நிருபர் - 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024