Thursday, October 26, 2017


மூன்று துறைகளின் செயலர்கள் மாற்றம்


சென்னை: முதன்மை செயலர் மற்றும் செயலர் அந்தஸ்தில் உள்ள, மூன்று, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.

திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மை செயலர் ஆக உள்ள கிருஷ்ணன், வீடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலர் ஆக மாற்றப்பட்டுள்ளார்.

வீடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் ஆக உள்ள தர்மேந்திர பிரதாப் யாதவ், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலராக உள்ள மங்காத் ராம் சர்மா, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024