Thursday, October 19, 2017

ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அதிசயம் : சுனை தீர்த்தத்தால் உடல் ஆரோக்கியம்

சேலம்: சேலம் மாவட்டம், மல்லுார், சுனை கரடு கிழக்கில், வெங்கடேச பெருமாள் கோவில், மேற்கில், ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. 700 ஆண்டுகள் பழமையான, சிவன், பெருமாள் கோவில், ஒரே இடத்தில் அமைந்துள்ளது சிறப்பு.காஞ்சிபுரத்தில் இருந்து, திருச்செங்கோடு சென்ற சிவபெருமான், சுனை கரடு மீது கால் பதித்து சென்றதாக ஐதீகம். அதனால், ஏகாம்பரேஸ்வரர் கோவில் வடபுறம், சிவபெருமான் கால்பாதம் வடிவமைத்து, பக்தர்கள் பூஜை செய்கின்றனர். அந்த கோவில், ராகு, கேது பரிகார தலமாக கருதப்படுவதால், காலசர்ப்ப தோஷத்துக்கு, 
பரிகார பூஜை செய்தால், திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.ஏகாம்பரேஸ்வரர் கோவில் முன், கடும் வறட்சி காலத்திலும் தண்ணீர் வற்றாத சுனை உள்ளது. அதில் ஊறும் தண்ணீரில் இரும்பு சத்து கலந்துள்ளது. அதற்கு சாட்சியாக, அங்குள்ள பாறை, சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறது. அங்கு வழங்கப்படும் தீர்த்தம், இரும்புச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வதாக, பக்தர்கள் நம்புகின்றனர்.

கோயில் அர்ச்சகர் குமார் கூறியதாவது:பல்வேறு பல்கலை ஆராய்ச்சியாளரகள், பேராசிரியர் அடங்கிய குழுவினர்,1990ல், 20 நாட்கள் தங்கி, தண்ணீர் மற்றும் பாறைகளை ஆய்வு செய்தனர். அதன் முடிவில், தண்ணீரில் இரும்பு சத்து கலந்துஉள்ளதாக தெரிவித்தனர். அந்த சுனை நீரை எடுத்து, ஏகாம்பரேஸ்வரருக்கு அபி ேஷகம் செய்து, பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்குகிறோம். அதை பருகுவதால், உடல் ஆரோக்கியம் பெறும். இங்கு, சித்தர்கள் வாழ்ந்ததாக ஆய்வில் தெரிய
வந்தது, என்று அவர்கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY