Thursday, October 26, 2017

மாவட்ட செய்திகள்

பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு



காஞ்சீபுரம் அருகே நின்று கொண்டிருந்த தனியார் நிறுவன பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அக்டோபர் 26, 2017, 05:00 AM
காஞ்சீபுரம்,

ஈரோடு பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி. இவரது மகன் நித்தின் கார்த்தி (வயது 20). சென்னை, சிட்லபாக்கம் எம்.சி.நகரை சேர்ந்தவர் சஞ்சையன். இவரது மகன் பிரீதம் (20). இவர்கள் இருவரும் காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் ஒரு மோட்டார்சைக்கிளில் காஞ்சீபுரத்தை செட்டியார்பேட்டை அருகே உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு மருத்துவ கல்லூரி விடுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.

சாவு

கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்கள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் செட்டியார்பேட்டையில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு தனியார் நிறுவன பஸ்சில் மோதியது. இதில் மருத்துவ கல்லூரி மாணவர்களான நித்தின் கார்த்தி, பிரீதம் இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024