Thursday, October 26, 2017


200 விமான பயணிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்: சாம்சங் தாராளம்

200 விமான பயணிகளுக்கு இலவச  ஸ்மார்ட்போன்: சாம்சங் தாராளம்
Share this video : 
spaceplay / pause
 
qunload | stop
ffullscreen
shift + slower / faster
volume
 
mmute
seek
 
 . seek to previous
12… 6 seek to 10%, 20% … 60%
டேமேஜ் கண்ட்ரோல் மோடில் சாம்சங்
மாட்ரிட்: ஸ்பெயினில் விமானத்தில் பயணித்த 200 பயணிகளுக்கு சாம்சங் நிறுவனம் கேலக்சி நோட்-8 மாடல் ஸ்மார்ட் போன்களை இலவசமாக வழங்கியது.

கடந்த ஆண்டு சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன் பேட்டரிகள் திடீரென தீப்பிடித்ததன் காரணமாக பல்வேறு நாடுகளிலும் இந்த போன்களுக்கு தடை விதிக்கப்பட்டது. விமானங்களில் இது போன்ற சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களில் உஷ்ணம் அதிகமாகி, தீப்பொறிகள் கிளம்பியதை அடுத்து பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் திரும்ப பெறப்பட்டன.

இந்நிலையில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள சாம்சங் கேலக்சி நோட்-8 ரக ஸ்மார்ட் போன் மிகவும் பாதுகாப்பானவை என விமான பயணிகளிடம் தெரிவிக்கும் விதமாக இலவசமாக நோட்-8 ஸ்மார்ட் மொபைல் போன்களை சாம்சங் வழங்கி பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது.
ஸ்பெயினின் ஐபிரியா- மாட்ரிட் இடையே விமான பயணம் மேற்கொண்ட 200 பயணிகளுக்கு நோட்-8 ஸ்மார்ட் போனை, விமான பணி பெண்களே பயணிகளுக்கு விநியோகம் செய்தனர். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 68 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சாம்சங் நோட் -8 ஸ்மார்ட் போனை இலவசமாக வாங்கிய பயணிகள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். 
விமான பயணிகளின் சந்தோஷம் அடையும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024