Thursday, October 26, 2017


அரசு பஸ்சில், 'அரை டிக்கெட்' : வயது சான்றிதழ் அவசியம்


''அரசு பஸ்களில், அரை கட்டண டிக்கெட் எடுக்க விரும்புவோர், குழந்தைகளின் வயது சான்று எடுத்துச் செல்வது அவசியம்,'' என, சேலம் கோட்ட போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், பாண்டி கூறினார். அரசு பஸ்களில், மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கட்டணம் கிடையாது; 3 முதல், 12 வயது வரை, அரை கட்டணம் வசூலிக்கப்படும். குழந்தைகளின் வயதில், கண்டக்டருக்கு சந்தேகம் ஏற்படும் போது, உயரத்தை கணக்கிடுவர்.
இதற்கு பஸ்சில் வசதி உள்ளது. 130 செ.மீ.,க்கு மேல் உயரம் இருப்பின், முழு கட்டணம் செலுத்த வேண்டும். பல நேரங்களில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் உயரமாக இருப்பதால், முழு கட்டணம் செலுத்த நேரிடுகிறது. இதனால், கண்டக்டர் - பயணியர் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இது குறித்து, சேலம் கோட்ட போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், பாண்டி கூறுகையில், 
''அரை டிக்கெட் எடுப்பவருக்கான வயது சான்றை, பயணத்தின் போது எடுத்துச் சென்றால், எந்த சிக்கலும் வராது. ஆகையால், இனி அரை டிக்கெட் எடுக்க வேண்டிய பெற்றோர், தவறாமல், குழந்தையின் வயது சான்று எடுத்துச் செல்வது நல்லது,'' என்றார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024