Thursday, October 26, 2017


பட்டப்பகலில் கொள்ளை : சேலத்தில் அட்டகாசம்


சேலம்: பட்டப்பகலில், முகமூடி அணிந்த கொள்ளையர்கள், டிக்கெட் புக்கிங் சென்டருக்குள் புகுந்து, பெண் ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம், மொபைல், மடிக்கணினிகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
சேலம், கிச்சிப்பாளையம் பிரதான சாலையில், மூன்றாவது மாடியில், பிரவீன்மவுரியா, 35, என்பவர் ரயில், பஸ் டிக்கெட் புக்கிங் சென்டர் நடத்தி வருகிறார். 
நேற்று காலை, 11:45 மணிக்கு, அங்கு முகமூடி அணிந்து வந்த மூன்று மர்ம நபர்கள், கத்தியை காட்டி, பணியில் இருந்த பெண்களை மிரட்டி, முதலில், கண்காணிப்புகேமராவை பறித்துள்ளனர்.
தொடர்ந்து, கடையில் இருந்த, 16 ஆயிரம் ரூபாய், எட்டு மொபைல், நான்கு மடிக்கணினிகளை கொள்ளையடித்து, தயாராக நிறுத்தி இருந்த மொபட்டில் ஏறிச்சென்றனர்.
பின், கடை ஊழியர்கள், கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து, பிரவீன் மவுரியா அளித்த புகார்படி, போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம், மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024