Thursday, October 26, 2017


'டெங்கு' கொசு வளர்த்தவர்களுக்கு சேலத்தில் ரூ.40 லட்சம் அபராதம்


சேலம்: ''சேலத்தில் டெங்கு கொசு ஒழிக்கும் பணியில், மெத்தனம் காட்டும் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் அபராதத் தொகையை செலுத்த தவறினால், சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்,'' என, கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
சேலம், ராமகிருஷ்ணா சாலையில், மாநகராட்சி உயர் அதிகாரிகள் பங்களாவுக்கு எதிரே, எல்.ஆர்.என்., பணிமனை உள்ளது. இங்கு நேற்று காலை, கலெக்டர், ரோகிணி, மாநகராட்சி கமிஷனர், சதீஷ் ஆகியோர் தலைமையில், அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர்.

பணிமனையில் பழைய வாகனங்கள், டயர் உள்ளிட்ட உதிரிபாகங்கள், வாகனங்களை மூடி வைக்க பயன்படுத்தப்படும் தார்ப்பாய்கள் ஆகியவற்றில், டெங்கு கொசுக்களை உருவாக்கும் புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.அதிர்ச்சி அடைந்த கலெக்டர், எல்.ஆர்.என்., பணிமனைக்கு, 15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து, கலெக்டர், ரோகிணி கூறியதாவது:சேலம் மாநகராட்சி, மாவட்டத்தில், பல நிறுவனங்கள் டெங்கு தடுப்பு பணிகளை முழுமையாக மேற்கொள்ளாமல், தங்களது பொறுப்புகளை தட்டி கழித்தன. தற்போது, ஆய்வு நடத்தி, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள், தங்களின் அனைத்து குறைகளையும், 24 மணி நேரத்துக்குள் சரி செய்ய வேண்டும்.

நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை, மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கும் நாட்களுக்குள் செலுத்த வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் மாநகராட்சி பகுதியில் நேற்று மட்டும், 40 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024