Thursday, October 26, 2017


'தூக்கு தண்டனையின்போது டாக்டர்கள் வேண்டாமே!'


'தூக்கு தண்டனையின்போது டாக்டர்கள் வேண்டாமே!'
புதுடில்லி: 'துாக்கு தண்டனையை நிறைவேற்றும்போது, டாக்டர்கள் உடனிருக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்' என, இந்திய டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

துாக்கு தண்டனையை நிறைவேற்றும்போது, தண்டனை நிறைவேற்றப்பட்டவரின் உடலைப் பரிசோதித்து, அவர் இறந்து விட்டார் என்பதை உறுதி செய்வதற்காக, டாக்டர்கள் உடன் இருக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

இந்த நிலையில், இந்திய டாக்டர்கள் சங்கத்தின் தலைவர், கே.கே. அகர்வால், இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:ஒருவருடைய துாக்கு தண்டனையை நிறைவேற்றும்போது, டாக்டர்கள் உடனிருப்பது, மருத்துவ நியதிகளுக்கு எதிரானது. உயிரைக் காப்பாற்ற வேண்டிய டாக்டர்கள், உயிரைப் பறிக்கும்போது உடனிருக்கும் நடைமுறையை மாற்ற வேண்டும். சர்வதேச மருத்துவ சங்கம் இது தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், இந்த நடைமுறையை மாற்றுவது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024