Thursday, October 26, 2017

மாநில செய்திகள்

தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை, செங்கோட்டைக்கு தினமும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்



தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை, செங்கோட்டைக்கு தினமும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.

அக்டோபர் 26, 2017, 04:45 AM

சென்னை,

சென்னையில் சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு அடுத்தபடியாக தாம்பரம் ரெயில் நிலையம் 3–வது ரெயில் முனையமாக அமைக்கப்பட்டது. தற்போது அங்கிருந்து சில வாராந்திர சிறப்பு ரெயில்கள் மட்டும் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை வழியாக நெல்லைக்கும், தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டைக்கும் தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.அதன் விவரம் வருமாறு:–

* தாம்பரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் மாலை 3.30 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்தை சென்றடையும்.

* மறுமார்க்கத்தில், நெல்லையில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் ரெயில் அன்று இரவு 9.45 மணிக்கு சென்னையை வந்தடையும்.

(இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்).

* தாம்பரத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரெயில் செங்கோட்டை ரெயில் நிலையத்தை அன்று இரவு 10.30 மணிக்கு சென்றடையும்.

* மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

(இந்த ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்).

இந்த புதிய ரெயில்களில் 18 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. இந்த ரெயில்கள் இயக்கப்படும் தேதி குறித்து தெற்கு ரெயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024