Saturday, October 28, 2017


நடிகர் விக்ரம் மகளை மணக்கிறார் கருணாநிதியின் கொள்ளு பேரன்


நடிகர் விக்ரமின் மகள், அக்ஷிதா, மு.க.முத்து பேரன், மனுரஞ்சித் ஆகியோரின் திருமணம், நவ., 1ல், சென்னை, கோபாலபுரம் வீட்டில், தி.மு.க., தலைவர், கருணாநிதி தலைமையில் நடக்கிறது. 
இந்த திருமணத்தின் மூலம், நான்காவது தலைமுறையினரின் திருமணத்தை நடத்தி வைக்கும் பெருமை, கருணாநிதிக்கு கிடைத்துள்ளது.

'கெவின் கேர்' குழுமத்தின் நிறுவனர், சி.கே.ரங்கநாதனின் மகன், மனுரஞ்சித். இவரது தாயார், தேன்மொழி. இவர், கருணாநிதியின் மூத்த மகன், மு.க.முத்துவின் மகள். நடிகர் விக்ரமின் மகள், அக்ஷிதாவும், மனுரஞ்சித்தும் காதலித்தனர். அதைத் தொடர்ந்து, 2016 ஜூலை, 10ல், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், இருவரின் நிச்சயதார்த்த விழா நடந்தது. அதில், கருணாநிதி பங்கேற்றார். கடந்த டிசம்பர் மாதம், கருணாநிதிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் வீட்டில் தங்கியபடி, சிகிச்சை எடுத்து வருகிறார்.
நடிகர் விக்ரம் குடும்பத்தினர், 'கருணாநிதியின் தலைமையில் திருமணம் நடந்தால், நன்றாக இருக்கும்' என, மணமகன் வீட்டாரிடம் தெரிவித்துஉள்ளனர். ஆனால், 'கருணாநிதியை, திருமண மண்டபத்திற்கு அழைத்து வர முடியாது' என, குடும்பத்தினர் கூறி விட்டனர். அதன்பின், கோபாலபுரம் வீட்டில், காலையில், கருணாநிதி முன்னிலையில், திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அன்று மாலையில், சென்னை, மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில், வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதுவரையில், பேரன், பேத்திகளின் திருமணத்தை நடத்தி வைத்த கருணாநிதிக்கு, நான்காவது தலைமுறையான, கொள்ளு பேரனின் திருமணத்தையும் நடத்தி வைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...