Saturday, October 7, 2017

வித்யாசாகர் ராவ் விடைபெற்றார்; பன்வாரிலால் புரோகித் பதவியேற்றார்



தமிழ்நாட்டின் 30–வது கவர்னராக பன்வாரிலால் புரோகித் நேற்று பதவியேற்றார்.

அக்டோபர் 07 2017, 03:00 AM

தமிழ்நாட்டின் 30–வது கவர்னராக பன்வாரிலால் புரோகித் நேற்று பதவியேற்றார். சுதந்திரத்திற்குப்பிறகு இதுவரையில் 29 முழுநேர கவர்னர்களும், பொறுப்பு கவர்னர்களும் தமிழ்நாட்டை நிர்வகித்து இருக்கிறார்கள். ஆனால், இதுவரையில் பொறுப்பு கவர்னராக மட்டு மல்லாமல், மிகவும் பொறுப்புவாய்ந்த கவர்னராக இருந்த மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் யாரும் இவ்வளவு நாட்கள் பதவி வகிக்காதநிலையில், 13 மாதங்களுக்கும் மேலாக பொறுப்பு கவர்னர் பதவியில் இருந்திருக்கிறார். இதற்கு முன்பு கவர்னராக இருந்த ரோசய்யாவின் பதவிகாலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்தநிலையில், செப்டம்பர் மாதத்தில் மராட்டிய மாநில கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் கூடுதல் பொறுப்பாக தமிழகத்தின் கவர்னராகவும் பொறுப்பேற்றார். மராட்டிய மாநிலமும் பெரிய மாநிலம். தமிழ்நாடும் பெரிய மாநிலம் என்றாலும், மிகத்திறமையாக இருமாநிலங்களுக்கும் பறந்துவந்து சிறந்த நிர்வாகியாக செயல்பட்டார்.

அவர் பொறுப்பேற்ற சிலநாட்களிலேயே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்தும் தொடர்ந்து டிசம்பர் மாதம் 5–ந்தேதி மருத்துவமனையில் ஜெயலலிதா காலமானபிறகும், குழப்பம் மிகுந்த அரசியல் அலைகளுக்கு இடையே தமிழக நிர்வாகம் என்ற படகை மிகச்சிறந்த மாலுமியாக ஓட்டிச்சென்றார். முதலில் ஓ.பன்னீர்செல்வம், பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 6 மாதகாலத்திற்குள் பொறுப்பு கவர்னராக இருந்து 3 முதல்–அமைச்சர்களை பார்த்தவர். பல்கலைக்கழக வேந்தர் என்றமுறையில், பல்கலைக்கழகங்களை மிகச்சிறந்த முறையில் நிர்வ கித்தார். துணைவேந்தர்களை நியமனம் செய்யும்போது அவர்களை நேர்முகத்தேர்வுக்கு வரவழைத்து பின்னரே தேர்வுசெய்தார். கவர்னர் மாளிகையை ‘மக்கள் மாளிகை’ என்று சொல்லும்வகையில், பொதுமக்கள் தாராளமாக வந்து பார்க்க அனுமதி அளித்தார். கவர்னர் மாளிகையில் அவ்வையார், திருவள்ளூவர் சிலை அமைத்து தமிழுக்கு பெருமை சேர்த்தார். அவர் பொறுப்பு கவர்னராக இருந்து விடைபெற்றுச் சென்றாலும், தமிழகம் அவரை ஒருபோதும் மறக்காது.

இப்போது புதிய கவர்னராக அரசியலில் நீண்டநெடிய அனுபவம்பெற்ற, மிகவும் எளிமையான 77 வயதுள்ள பன்வாரிலால் புரோகித் நேற்று பதவியேற்றார். ‘அரசியல் பாகுபாடின்றி, அரசியல் சட்டப்படியே எந்த முடிவையும் எடுப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்’ என்ற அவரின் முதல் உறுதிமொழி அவர்மீது பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. எம்.எல்.ஏ.வாக, எம்.பி.யாக பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட பன்வாரிலாலுக்கு அரசியல் அத்துப் படியாக இருக்கும். ஏற்கனவே அசாம் மாநில கவர்னராகவும், மேகாலயா மாநில பொறுப்பு கவர்னராகவும் இருந்த பன்வாரிலால், கவர்னர் பதவியிலும் நல்ல அனுபவமிக்கவர். நாக்பூர், ஜபல்பூர், ராய்ப்பூர், போபால் ஆகிய இடங்களி லிருந்து வெளிவரும் ‘தி ஹிட்டாவாடா’ ஆங்கில பத்திரிகையில் ஆசிரியராக இருந்து அதன் தலைமை பொறுப்பையும் ஏற்று பத்திரிகை துறையிலும் நீண்டநெடிய அனுபவம் பெற்றிருக்கிறார். மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழகத்தின் பொறுப்பை ஏற்றுள்ள அவர்முன் பல கடமைகள் காத்திருக்கின்றன. டி.டி.வி.தின கரனின் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களுமான 11 எம்.எல்.ஏ.க்கள் ஏன் பதவிநீக்கம் செய்யப்படவில்லை? என்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் சூழ்நிலையில், இந்த தீர்ப்பு வந்தபிறகு கவர்னருக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. பதவியேற்ற நாள்முதல் அவர் பெரும் சவால் களை சந்திக்க வேண்டியதிருக்கிறது. அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். தமிழக அரசில் ஒரு ஸ்திரத்தன் மையை ஏற்படுத்தவேண்டும். அரசியல் குழப்பங்களுக்கு ஒரு தீர்வுகாணவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக பல்கலைக்கழக வேந்தர் என்றமுறையில், சில துணை வேந்தர்கள் நியமனம் உள்பட பல்கலைக்கழகங்களை சீரமைக்கும் பணியும் அவருக்காக காத்துக்கொண்டி ருக்கிறது. எதிர்க்கட்சியினரும் அவர்மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தமிழக அரசின் நிர்வாகத்தையும், தமிழகத்தையும் ஒரு புதிய பரிமாணத்தை நோக்கி பன்வாரிலால் புரோகித் வழிநடத்துவார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024