Saturday, October 7, 2017

சாதாரண பெட்ரோல் போட மறுப்பு : வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி

பதிவு செய்த நாள்06அக்
2017
23:58


சென்னையில், பெட்ரோல் பங்க்குகளில், சாதாரண பெட்ரோல் போட மறுப்பதாக, வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பங்க்குகளில், சாதாரணம் மற்றும் உயர்தரம் என, இரண்டு வகை பெட்ரோல் விற்கப்படுகிறது.

பங்க் உரிமையாளருக்கு, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 3.90 ரூபாய்; டீசலுக்கு, 2.50 ரூபாயை, எண்ணெய் நிறுவனங்கள் கமிஷனாக தருகின்றன. தற்போது, பல பங்க்குகளில், சாதாரண பெட்ரோல் விற்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது: ஒரு லிட்டர் சாதாரண பெட்ரோல் விலை, 70 ரூபாயாக உள்ளது. இதை விட, உயர்தர பெட்ரோல் விலை, சற்று அதிகம். இதனால், சாதாரண பெட்ரோலை தான், பலரும் பயன்படுத்துவர். சமீபகாலமாக, சென்னை உட்பட, பல முக்கிய நகரங்களில் உள்ள பங்க்குகளில், சாதாரண பெட்ரோல் கேட்டால், உயர்தர பெட்ரோல் போட்டு கொள்ளுமாறு, ஊழியர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில், 'சாதாரண பெட்ரோல் இல்லை; உயர்தர பெட்ரோல் மட்டுமே உள்ளது' என, ஊழியர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து, பங்க் உரிமையாளர்களிடம் புகார் அளித்தால், 'எங்களுக்கு வரும், பெட்ரோல் தான் தரப்படும்' என, அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். ஏற்கனவே, பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், சாதாரண பெட்ரோல் விற்காதது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.தமிழகத்தில், 4,850 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. தலா, ஒரு பங்க்கில், தினசரி, சராசரியாக, 5,000 லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனையாகின்றன.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024