Friday, October 6, 2017

மானாமதுரையில் அரசு வழங்கிய 360 ஸ்மார்ட் கார்டுகளிலும் பிழை..! கார்டை வாங்க மக்கள் மறுப்பு



சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ளது மேலப்பசலை கிராமம். இக்கிராமத்தில் உள்ள ரேஷன்கடையில் ஸ்மார்ட் கார்டு நுகர்வோர்களுக்கு வழங்கபட்டது. இந்தக் கார்டில் மேலப்பசலை என்பதற்குப் பதிலாக 360 ரேஷன் கார்டிலும் மேலப்பிடாவூர் என்கிற முகவரி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கார்டுகளைக் கடந்த மாதம் மக்களுக்கு விநியோகம் செய்யும்போதே பொதுமக்கள் வாங்க மறுத்துவிட்டனர். மேலப்பிடாவூர் என்கிற முகவரியை மாற்றாமல் வாங்க முடியாது என்று மறுத்துவிட்டார்கள் அக்கிராம மக்கள். ஆனால் மீண்டும் அதே முகவரியோடு எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் மேலப்பசலை ரேஷன்கடையில் ஸ்மார்ட் கார்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து இக்கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கூறிய அந்தக் கிராம மக்கள், 'ரேஷன்கடையில் மண்ணெண்ணெய் குறைந்துவிட்டது. உளுந்து வழங்வது இல்லை. சீனி, அரிசி பாமாயில் எதுவுமே மாதந்தோறும் வழங்கப்படுவது இல்லை.

இந்நிலையில் சிவப்பு கலர் பருப்பு போடுறாங்க. அந்தப் பருப்பைச் சாப்பிட்டால் மூட்டுவலி வருமாம். ஆக எங்களுக்கு எந்தப் பொருளும் ஒழுங்காக வழங்காத நிலையில் ஸ்மார்ட் கார்டு இப்படி வழங்கப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்' என்று ஆதங்கப்பட்டார்கள்.


Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024