Saturday, October 7, 2017

வீடுகளில், 490 யூனிட் மின்சாரம்: ஆய்வு நடத்த வாரியம் உத்தரவு
பதிவு செய்த நாள்07அக்
2017
00:54




இரு மாதங்களில், 490 யூனிட் மின்சாரம் பதிவாகியுள்ள வீடுகளை ஆய்வு செய்யுமாறு, பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம், இரு மாதங்களுக்கு, 500 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு, மானிய விலையில் வழங்குகிறது. இதற்காக, மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை, அரசு வழங்குகிறது.

மின் பயன்பாடு கணக்கு எடுக்க செல்லும் சில ஊழியர்கள், வீட்டு உரிமையாளர்களுடன் சேர்ந்து, மின் பயன்பாட்டை, குறைத்து கணக்கு எடுப்பதாக, மின் வாரியத்திற்கு புகார்கள் வந்துள்ளன.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் பயன்பாடு குறைத்து எழுதுவதாக புகார் வந்ததை அடுத்து, ஆய்வு நடத்துமாறு, பிரிவு அலுவலக உதவி பொறியாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. அவர்கள்,'பிசி'யாக இருப்பதால், அதில் கவனம் செலுத்தவில்லை.

பல வீடுகளில், ஒவ்வொரு முறையும், 480 யூனிட் - 490 யூனிட் மின்சாரம் பதிவு செய்வது தொடர்பாக, தகுந்த ஆதாரங்களுடன் புகார்கள் வருகின்றன. அவ்வளவு துல்லியமாக மின்சார அளவை பார்த்து, பயன்படுத்த சாத்தியம் குறைவு. எனவே, தொடர்ந்து, 490 யூனிட் மின்சாரம் பதிவாகியுள்ள வீடுகளை கண்காணித்து, பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அவற்றின் விபரத்தை, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்கள், மாதம் தோறும், தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024