Saturday, October 7, 2017

தீபாவளிக்கான பஸ் முன்பதிவு மையங்கள் திறப்பு எப்போது?
பதிவு செய்த நாள்06அக்
2017
18:57

சென்னை: தீபாவளிக்கு இன்னும், 11 நாட்களே உள்ள நிலையில், அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கான முன்பதிவு கவுன்டர்கள் திறக்கப்படாதது, பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தீபாவளி பண்டிகை, வரும், 18ல், கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, 15 முதல், 17ம் தேதி வரை, தினமும், 4,820 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதற்கான, சிறப்பு முன்பதிவு கவுன்டர்கள், இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், சொந்த ஊர் செல்ல விரும்பும் தென் மாவட்ட பயணியர், பயணம் குறித்து தெளிவான முடிவு எடுக்க முடியாமலும், எந்த நாட்களில் விடுப்பு எடுப்பது என, தெரியாமலும் தவித்து வருகின்றனர். எனவே, 'பயணியர் பயன்பெறும் வகையில், ௧௦ நாட்களுக்கு முன், சிறப்பு முன்பதிவு மையங்களை திறக்க வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், போக்குவரத்து துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தி உள்ளனர். முன்பதிவு மையங்கள் அறிவிப்பு வெளியாகும்' என்றனர்.

சிறப்பு பஸ்கள் : சென்னையில் இருந்து, தினமும், 2,275 பஸ்கள் இயக்கப்படுகின்றன. வரும், 15 முதல், 17ம் தேதி வரை, தினமும், 4,820 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகை முடிந்ததும், 18ம் தேதி முதல், இதுபோல் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்தும், சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்

சென்னையில் கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், சின்னமலை, அண்ணா நகர் மேற்கு, பூந்தமல்லி என, ஐந்து இடங்களில், சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024