Saturday, October 7, 2017

கொடூர குற்றங்களில் சமரசம் செய்தாலும் வழக்கு தொடரும்'

பதிவு செய்த நாள்06அக்
2017
20:39

புதுடில்லி: 'கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில், பாதிக்கப்பட்டவரும், குற்றஞ் சாட்டப்பட்டவரும் சமரசம் செய்தாலும், வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

குஜராத்தில், நில அபகரிப்பு தொடர்பாக, நான்கு பேர் மீதான வழக்கில், சமரசம் செய்து கொண்டதால், வழக்கை வாபஸ் பெறுவதாக கூறப்பட்டதை, குஜராத் உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து, விசாரணை தொடரும் என, அறிவித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதை விசாரித்த, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அளித்த உத்தரவு: நில அபகரிப்பு என்பது, பொருளாதார குற்றம். இது, இரு தரப்பை மட்டும் பாதிக்கவில்லை; ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே பாதிக்கும்.
கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில், இரு தரப்பும் சமரசம் செய்து கொள்வதால், பிரச்னை முடிந்து விடாது; இது, சமூகத்தை பாதிக்கும் பிரச்னை.

அதனால், இது போன்ற பெருங்குற்றங்களில், சமரசம் செய்தாலும், வழக்கின் விசாரணை தொடரும். அதன்படி, நில அபகரிப்பு வழக்கில், குஜராத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்கிறோம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024