Saturday, October 7, 2017

காய்ச்சலை மறைத்தால் டாக்டர்களுக்கு சிறை
பதிவு செய்த நாள்06அக்
2017
19:30

'நோயாளிகளிடம், எந்த வகை காய்ச்சல் என்பதை தெரிவிக்காத டாக்டர்களுக்கு, பொது சுகாதார சட்டப்படி, ஆறு மாத சிறை தண்டனை அளிக்கலாம்' என, சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில், டெங்கு, பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல், மலேரியா, டைபாய்டு போன்ற காய்ச்சல்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. காய்ச்சலில் பாதிக்கப்பட்டு, இந்தாண்டு, 100 பேர் வரை உயிர் இழந்துள்ளதாக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், சிகிச்சை பெறுவோருக்கு, எந்த வகை காய்ச்சல் பாதிப்பு உள்ளது என்ற தகவலை, டாக்டர்கள் மறைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர், இளங்கோ கூறியதாவது:

தமிழக பொது சுகாதாரச் சட்டம், 1939ல், உருவாக்கப்பட்டது. அந்த சட்ட பிரிவு, 52, 62, 83ன்படி, தொற்று நோய்களை தடுத்தல், நோய் தாக்கம் குறித்தும், தொற்று நோய் எந்த அளவு பாதித்துள்ளது என்பது குறித்தும், பொதுமக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும்.

இது போன்ற தகவல்களை தெரிவிக்காத டாக்டர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் மீது வழக்கு தொடரலாம். அவர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதமும், ஆறு மாதம் வரை சிறை தண்டனையும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024